வடக்கு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக மத்திய அமைச்சரிடம் 28 திட்டங்கள் சமர்ப்பிப்பு- வடக்கு சுகாதார அமைச்சர்

265 0
வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் 5 மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்காக 28 திட்டஙகளிற்காக 2 ஆயிரத்து 895 மில்லியன் ரூபா உதவியினை மத்திய சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்னாவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் 5 மாவட்டத்திலும் உள்ள பல  வைத்தியசாலைகளில் பல  அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு இனம்கானப்பட்ட தேவைகள் தொடர்பில் அண்மையில் வடக்கிற்கு  வருகை தந்த சுகாதார அமைச்சரை அழைத்துச் சென்று கான்பித்தோம். அதில் அவசியம் எனக் கண்டறியப்பட்ட முக்கிய 28 திட்டஙகளிற்கான செலவு மதீப்பீட்டுடன் அதன் விபரங்களை தற்போது சமர்ப்பித்துள்ளோம் அதன் பிரகாரம் அவற்றின் மொத்தப் பெறுமதி 2 ஆயிரத்து 795 மில்லியன் ரூபாவாகும
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ள எண்ணிய 9 திட்டங்களிற்காக 235 மில்லியன் ரூபாவும் , வவுனியா மாவட்டத்தினில் மேற்கொள்ள எண்ணியுள்ள 8 திட்டங்களிற்காக 2 ஆயிரத்து 173 மில்லியன் ரூபாவும் , மன்னார் மாவட்டத்தில் மேற்கோள்ள திட்டமிடப்பட்ட 6 திட்டங்களிற்காக 190 மில்லியன் ரூபாவும் கோரப்பட்டதோடு கிளிநொச்சியில் ஒரு திட்டத்திற்காக 70 மில்லியன் ரூபாவும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 திட்டங்களிற்காக 227மில்லியன் ரூபாவுமாக மொத்தம் 2895 மில்லியன் ரூபா வேண்டும் எனக் கண்டறியப்பட்டு அதற்கான திட்ட அறிக்கைகளுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள திட்டங்களில் மத்திய சுகாதார அமைச்ணினாலர உடனடியாக அனுமதிக கப்படக் கூடிய திட்டங்கள் தொடர்பில் ஆய்வின் பின்னர் சுகாதார அமைச்சரினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும். இவை விரைவில் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. என்றார்