எந்தத்தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

242 0

எந்தத்தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் 34 வது நாளாகவும் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் பகுதியில் தனியார் ஒருவருக்குச்சொந்தமான நீர் வரிக்காணியை பங்கிட்டு கடந்த 27 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் 120 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான வீட்டுத்திட்டங்கள் ஏனைய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தருமாறு கோரி மேற்கொண்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று  34வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த காணியானது தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்ட காணியென்பதால் அதற்கான உரிமத்தை இரத்துச்செய்து குறித்த குடும்பங்களுக்கு வழங்கமுடியாத நிலையில் உள்ளது என்றும் காணி உரிமையாளரே குறித்த காணியை மனமுவந்து வழங்கவேண்டும் அதன் மூலமே இதற்கான தீர்வை  முடியும் எனவும் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளபோதும் மக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.