முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

972 0

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில்அணையாது எரியும் பெரு நெருப்பு.உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்தநாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.

எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் எத்தனை வருடங்கள் கடந்து சென்றாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமுடியாது.தமிழின அழிப்பை, முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோரி தொடர்ந்தும் போராடுவோம். மே 18 அன்று நீதி கோரும் மாபெரும் பேரணி Düsseldorf நகரில் நடைபெறும் சமையத்தில் , தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு 10 .05 .2017 அன்று முதல் 18 .5 .2017 வரை யேர்மன் நாட்டின் மேற்பிராந்தியத்தில் இருந்து தலைநகர் வரை தமிழின அழிப்பு கண்காட்சியை மையப்படுத்தி விழிப்புணர்வு ஊர்த்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படஉள்ளது. இவ் விழிப்புணர்வு ஊர்த்தி சுற்றுப்பயணனத்தில் ஊடறுக்கும் முக்கிய நகரமத்தியில் தமிழின அழிப்பு கண்காட்சி வைக்கப்பட்டு அங்கு உள்ள நகரபிதாக்களுடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு அத்தோடு நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு தமிழ் மக்களை அழைக்கும் முகமாக மக்கள் சந்திப்புகளும் நடைபெறும். நகரங்கள் வாரியான மேலதிகமான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.இப் பயணத்தில் 9 நாட்கள் இணைந்து அரசியற்செயற்பாட்டில் ஈடுபட விரும்புவர்கள் கீழ் குறிப்பிட்ட அமைப்புகளுடன் தொடர்புகொள்ளவும்.

எனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது. தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே.இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள வேண்டும். உலக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !

தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி