நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் (காணொளி)

231 0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “செமட்ட செவன” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில்  கிராம மட்டத்தில் வீடமைப்பு குழுக்கள் தெரிவு செய்யப்பட்டுவருகின்றன.

இவர்கள் ஊடாக பிரதேச செயலக மட்டத்தில் வீடமைப்பு குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீடமைப்பு வேலைத் திட்டங்களுக்கான குழுக்கள் தெரிவு செய்யும் குழு கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட 48  கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து பிரதேச செயலக செயற்குழுவுக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் குழு கூட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஜதிஸ்குமார், மண்முனை வடக்கு பிரதேச செயலக வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக 48 கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட கிராம மட்ட வீடமைப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.