கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு

510 0

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்­தப்பட்டு காணாமல் போகச்செய்­யப்பட்ட சம்ப­வத்­துடன் தொடர்­பு­பட்ட பிர­தான சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­படும் கடற்­படை லெப்­டினன்ட் கொமாண்டரை கண்ட இடத்தில் கைது செய்­யு­மாறு கோட்டை நீதிவான் நேற்று மீளவும் உத்­தர­விட்டார்.

அத்­துடன் லெப்­டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி கடற்­படை தலை­மை­ய­கத்தில் உள்­ள­தாக தக­வல்கள் கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில், கடற்­படை தலை­மை­ய­கத்தில் தேடுதல் நடத்தி அவரைக் கைது செய்­யு­மாறும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புறநகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் நேற்று மீள விசா­ர­ணைக்கு வந்த போதே அவர் இந்த உத்­தரவைப் பிறப்­பித்தார்.

அத்­துடன் குறித்த சந்­தேக நபர் கடற்­படை தள­ப­தியின் உத­வி­யுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தாக இணையம் ஒன்றின் ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­பட்ட    தக­வலை பாதிக்­கப்பட்ட தரப்பு சட்­டத்­த­ர­ணி­யான அச்­சலா சென­வி­ரத்ன மன்றில் முன்­வைத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் வெளி­நாட்­டுக்கு தப்பிச் சென்­றுள்­ளாரா என்­பது தொடர்பில் பிரத்­தி­யே­க­மாக தக­வல்­களைப் பெற்று விசா­ரணை செய்­யு­மாறும் நீதிவான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அறி­வித்தார்.

வசந்த கரண்­ணா­கொட

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­கப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­த­தி­ருந்­தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா   அதிபர் ரவி சென­வி­ரட்­னவின்   ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் நேர்டை கட்­டுப்­பாட்டில் புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இந்த ஐவரின் கடத்­தல்­க­ளுடன் லக்ஷ்மன் உதய குமார என்ற கடற்­படை சிப்பாய் நேர­டி­யாக பங்­கேற்­றி­ருந்­தமை விசா­ர­ணை­களில் தெரிய­வந்­தது.

கடற்­படை புல­ன­ாய்­வா­லர்­களில் ஒரு­வ­ரான லெப்­டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆராச்சி என்­ப­வ­ருடன் சேர்ந்து அவ­ரது அணியில் ஒரு­வ­ராக இருந்து உத­ய­கு­மார இக்­க­டத்­தல்­களை செய்­த­தாக புல­ன­யவுப் பிரிவு கூறு­கி­றது.

இந் நிலையில் கடற்­படை வீரர் லக்ஷ்மன் உத­ய­கு­மார மூன்­றா­வது சந்­தேக நப­ராக கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த கன­க­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்­வாறு கடத்­தப்­பட்ட அனை­வரும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள இர­க­சிய வதை முகா­மான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்­கப்பட்­டி­ருந்­த­மையை குற்றப் புல­னாய்­வா­ளர்கள் கண்­டு­பி­டித்­தனர்.

இந்த விடயம் சர்­வ­தேச அளவில் அவ­தா­னிப்­புக்கு உள்­ளா­கி­யுள்ள நிலையில், அந்த நிலத்­தடி இர­க­சிய வதை முகாமின் பொறுப்­பா­ள­ராக அப்­போது இருந்த லெப்­டினன் கொமாண்டர் தரத்­தினை உடைய தற்­போது கொமாண்டர் ராக பதவி உயர்த்­தப்பட்­டுள்ள ரண­சிங்க என்பவரையும் குற்றப் புல­ன­யவுப் பிரி­வினார் கைது செய்து விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்­ளனர்.

இந் நிலையில் அவர்கள் இரு­வரும் நேற்று சிறை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் படுத்­தப்பட்ட நிலையில் முத­லா­வது சந்­தேக நப­ரான பிணையில் உள்ள லெப்­டினன் கொமாண்டர் சம்பத் முன­சிங்க மன்றில் ஆஜ­ரானார்.

விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது, ஏற்­க­னவே 2ஆம் 3ஆம் சந்­தேக நபர்­க­ளான ரண­சிங்க, லக்ஷ்மன் உதய குமார சார்பில் கோரப்பட்­டி­ருந்த பிணை கோரிக்கை மீதான தீர்ப்­பினை நீதிவான் அறி­வித்தார்.

‘ சந்­தேக நபர்கள் தம்­மீது தண்­டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் சுமத்­தப்­பட்­டுள்ள கொலைக் குற்­றச்­சாட்­டினை சவா­லுக்கு உட்­ப­டுத்தி பிணைக் கோரி­யுள்­ளனர்.

கடத்­தப்பட்ட 11 பேரும் கொலை செய்­யப்பட்­டுள்­ளார்கள் என ஆதாரம் இன்றி தமக்கு எதி­ராக கொலை குற்­றச்­சாட்டு சுமத்த முடி­யாது என சந்­தேக நபர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

கடத்­தப்பட்­ட­வர்­களின் உட­லங்கள் கூட கிடைக்­காத நிலையில் அக்­குற்­றச்­சாட்­டினை சுமத்த முடி­யாது என அவர்கள் தமது பிணைக் கோரிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

எனினும் பிணை வழங்க சட்ட மா அதிபர் சார்பில் எதிர்ப்பு வெளி­யி­டப்பட்­டுள்­ளது.

மூன்றாம் சந்­தேக நபரே காணாமல் போனோரைக் கடத்­தி­ய­மைக்கும், 2 ஆவது சந்­தேக நபரின் கீழ் அவர்கள் கன்சைட் நிலத்­தடி முகாமில் தடுத்து வைக்கப் பட்­டி­ருந்­த­மைக்கும் ஆதாரம் உள்­ளது.

எனினும் 2009 மார்ச் மாதத்­துக்கு பின்னர் அங்கு தடுப்பில் இருந்­த­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என சாட்­சி­யங்கள் இல்லை.

இந் நிலையில் 1988 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க திருத்தச் சட்­டத்தின் ஊடாக திருத்­தப்பட்ட சாட்­சிகள் கட்­டளைச் சட்­டத்தின் 108 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய கடத்­தப்பட்டு சட்­ட­வி­ரோத தடுப்பில் உள்ள நபர்கள் தொடர்பில் தகவல் இல்­லாது போயின் அவர்கள் உயிருடன் இல்லை என்ற நிலைப்­பாட்­டுக்கு வர முடியும் என கூறப்­பட்­டுள்­ள­தாக கூறி சட்ட மா அதிபர் சார்பில் கொலை குற்றச் சாட்டு முன்­வைக்­கப்பட்­டுள்­ளது.

blogger-image-82361751  5 மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம்: கடற்படை அதிகாரியான ஹெட்டி ஆராச்சியை கண்ட இடத்தில் கைது செய்யுமாறு உத்தரவு blogger image 82361751இதனை விட கொலை வழக்­கொன்றில் குற்றம் சாட்டி கொலை செய்­யப்பட்­ட­வர்­களின் சடலம் அல்­லது கொலைக்­கான காரணம் கண்­ட­றியப்பட்­டி­ருத்தல் கண்­டிப்­பான அவ­சி­ய­மற்­றது. சடலம் இல்­லா­ம­லேயே கொலை குற்­றச்­சாட்டு சுமத்த முடியும்.

இந்­தி­யாவின் பிர­பல வழக்குத் தீர்ப்­புகள் இரண்டு இதனை சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­துடன் இலங்கை நீதி­மன்றமும் அதனை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

அதனால் தண்­டனை சட்டக் கோவையில் 296 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­றச்­சாட்டு சுமத்­தப்பட்­டுள்­ள­மை­யா­னது சரி­யா­னதே என நான் தீர்­ம­னிக்­கின்றேன்.

அதன்­படி பிணை சட்­டத்தின் 13 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமைய தண்­டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் குற்றம் சாட்­டப்­பட்­டி­ருப்பின் பிணை வழங்கும் அதி­காரம் இந்த மன்­றுக்கு இல்லை.

அதே போன்று குற்­றச்­சாட்­டுக்­களில் மற்­றொரு குற்­றச்­சாட்டு துப்­பாக்கி கட்­டளைச் சட்­டத்தின் 44 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழும் உள்­ளது. அது தொடர்­பிலும் பிணை வழங்கும் அதி­காரம் இம்­மன்­றுக்கு இல்லை. எனவே இரு­வரின் பிணை கோரிக்­கை­க­ளையும் நிரா­க­ரிக்­கின்றேன். என நீதிவான் லங்கா ஜய­ரத்ன அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து கைது செய்­யப்­பட வேண்­டிய சந்­தேக நப­ரான லெப்­டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆராச்சி தொடர்­பி­லான விவ­காரம் விவா­திக்­கப்பட்­டது. அவரை ஏன் இன்னும் கைது செய்­ய­வில்லை என நீதிவான் சி.ஐ.டி. யிடம் கேள்வி எழுப்­பினார்.

சி.ஐ.டி. சார்பில் நேற்று மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சர­ண­பால, மேல­திக அறிக்கை ஊடா­கவும் வாய் மொழி ஊடா­கவும் இதற்கு பதி­ல­ளித்தார்.

‘ கனம் நீதிவான் அவர்­களே, அவரைக் கைது செய்ய நாம் முயற்­சி­களை எடுத்தோம். அவரைத் தேடி அவர் வீட்­டுக்கு சென்றோம். அவர் அங்கு இல்லை.

அவ­ரது மனை­வி­யிடம் இது தொடர்பில் விசா­ரணை செய்தோம். இதன் போது அவர் கடற்­படை தலை­மை­ய­கத்தில் இருப்­ப­தா­கவும் அவர் கட­மையில் இருப்­பதால் மூன்று முறை தான் கடற்­படை தலை­மை­யகம் சென்று அவரை சந்­தித்து வந்­த­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

கடற்­படை தலை­மை­ய­கத்­தி­லேயே அவர் இருப்­ப­தாக தகவல் உள்­ளது. எனவே அந்த தக­வ­லுக்கு அமைய அவரைக் கைது செய்ய கடற்­படை தள­பதி, பாதுகாப்பு செயளாலர் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்­ளது’ என்றார்.

அப்­போது குறுக்­கிட்ட நீதிவான் ஏன் அங்கு சென்று அவரைக் கைது செய்­யா­வில்லை என கேள்வி எழுப்­பினார். அதற்கு கடற்­படை முகா­முக்குள் செல்ல அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை என சி.ஐ.டி. அதி­காரி குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் மன்றில் ஆஜ­ராகி இருந்த பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க, ஏன் குற்றப் புல­னாய்வுப் பி­ரி­வுக்கு சந்­தேக நபரைக் கைது செய்ய முகா­முக்குள் செல்ல முடி­யாதா என வின­வினார்.

இத­னை­ய­டுத்து, ஹெட்டி ஆராச்­சியை கண்ட இடத்தில் கைது செய்ய உத்­தர­விட்ட நீதிவான், கடற்­படை தலை­மை­ய­கத்தில் அவர் இருப்­ப­தாக தகவல் இருப்பின் உட­ன­டி­யாக கடற்­படை தலை­மை­ய­கத்தில் தேடுதல் நடத்தி அவரைக் கைது செய்யுமாறும்.

அங்கு செல்லும் போது அனுமதி தொடர்பில் சிக்கல் ஏற்படின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஊடாக அது தொடர்பில் கலந்தாலோசனை செய்யுமாறும் கூறினார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன இணையமொன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி,கடற்படை தளபதியின் உதவியுடன் ஹெட்டி ஆராச்சி நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து அது தொடர்பில் சட்டத்தரணியிடம் தகவல் இருப்பின் அதனைப் பெற்று உடனடியாக பிரத்தியேகமாக விசாரணை செய்யுமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.