இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையில்…(காணொளி)

264 0

2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்களை நிறைவேற்ற, இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையில், இணைப் பங்காளர்களாக இணைந்து கொள்ளவுள்ளதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் அமர்வில், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து, இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது சம்பந்தமாக யோசனை ஒன்றை முன்வைத்துள்ளன.

குறித்த யோசனையில் இலங்கைக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த யோசனையில் இணைப் பங்காளர்களாக இணைந்து கொள்ளவுள்ளதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.