ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை- சுஜீவ சேனசிங்க(காணொளி)

329 0

ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச வர்த்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இரண்டாயிரம் உற்பத்தியாளர்களை உருவாக்குவது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்றுமதித்துறையினால் கடந்த வருடம் இலங்கைக்கு 11 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட சர்வதேச வர்த்த இராஜங்க அமைச்சர், ஏற்றுமதி வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் கூரே, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் வர்த்தக துறைசார்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.