தமிழக பிரச்சனைகள் குறித்து ஐ.நா-அவையில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரை

246 0

* தமிழக மீனவர் படுகொலை
* கர்நாடகாவில் தமிழர் மீதான இனவெறி தாக்குதல்
* காவேரி நீர் உரிமை மறுத்தல்
* ஆந்திர அரசினால் கொல்லப்படும் தமிழர்கள்
எனும் பிரச்சனைகள் குறித்து ஐ.நா மனித உரிமைக்கமிசனில் மே17 இயக்கம் விரிவாக கடந்த வாரம் பதிவு செய்தது.

மீனவர்களை கொலை செய்யும் இலங்கை அரசின் மீது இந்திய அரசு நடவெடிக்கை எடுக்கவில்லை . அதே சமயம் இந்திய அரசு இலங்கை அரசை பாதுகாக்கவும், வளர்த்தெடுக்கவும் நட்புறவுடன் செயல்படுவதாலேயே மீனவர் கொலைகள் நடக்கின்றன.

கடந்த வாரம் ப்ரிட்ஜோ எனும் தமிழக மீன்வர் படுகொலை செய்யப்பட்டார். இதே பொல 2011இல் ஜனவரியில் 2 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 2011 ஏப்ரலில் இந்தியாவிடம் இலங்கை தோற்றதையடித்து 4 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டும், அடுத்தவர் உயிரோடு புதைக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்..

இது போல இதுவரை 600 மீனவர்கள் தமிழர்கள் எனும் காரணத்தினால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பக்கத்து நாட்டினர் எனு பொழுதிலும் ‘தமிழர் எனும் காரணத்தினாலேயே’ இலங்கை அரசு இவர்களை கொலை செய்கிறது. ஏனெனில் தமிழின எதிர்ப்பு இனப்படுகொலை மனநிலை கொண்டதால் இலங்கை அரசு இதை செய்கிறது,
மேலும், கர்நாடகாவில் நட்ந்த இனவெறியாட்டம், தமிழர்களுக்கு எதிரான வன்முறை, மற்றும் கர்நாடக அரசினால் பாதுகாக்கப்படும் வன்முறையாளர்கள், இந்திய அரசின் மெளனம் குறித்தும் குற்றச்சாட்டை முன் வைத்தோம்.

கடந்த வருடம் ஜூன் 2016இல் ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட தமிழக உழைப்பாளிகள் குறித்து பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டிற்கும், கொலை செய்தவர்கள் மீதும் இந்திய அரசு நடவெடிக்கை எடுக்கவில்லை. மற்றும், ஆந்திர அரசு தொடர்ந்து 170 தமிழர்களை கைது செய்து அரை நிர்வாண நிலையில் கைது செய்து சித்திரவதை செய்கிறது என்பதையும் பதிவு செய்தோம்.
காவேரி நீரை வழங்காமல் மறூப்பது ஐநாவின் சர்வதேச விதிமுறையான ‘தண்ணீர் மறூப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவது’..ஆனால் இந்த விதிமூறைகளை மீறி கர்நாடக அரசு தமிழர்களுக்கான தண்ணீரை மறுத்திருக்கிறது. இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும் இவ்வாறு மறுப்பது மனித உரிமை மீறும் செயல்.. என்றும் பதிவு செய்திருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ’தமிழர்கள்’ என்கிற ஒரே காரணத்தினாலேயே இந்திய அரசு அநீதி இழைத்துக்கொண்டிருக்கிறது. தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காகவே தொடர்ந்து துன்பங்களை சந்தித்து வருகிறார்கள் என்று மே பதினேழு இயக்கம் இந்திய அரசின் மீது குற்றச்சாட்டை பதிவு செய்து இந்தியாவின் ‘தமிழின எதிர்ப்பு இனவெறியை ஆவணங்களுடன்’ பதிவு செய்திருக்கிறோம்,

தமிழக தமிழர்கள் மீது இந்திய அரசு நடத்தும் ஒடுக்குமுறை குறித்து சர்வதேச மன்றத்தில் 2016இல் முதன்முறையாக மே 17 இயக்கம் பதிவு செய்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இந்த அமர்விலும் விரிவான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறோம்.

தமிழர்கள் மீதான் இனப்படுகொலை இனவெறி தாக்குதல், இனவெறிக்கொள்கை, மனித உரிமை மீறல் என அனைத்திற்கும் எதிரான மே பதினேழு இயக்கத்தின் போராட்டம் வலிமையுடன் தொடரும்.
தமிழக இளைஞர்களே! எங்கள் கரங்களை வலுப்படுத்த முன்வாருங்கள் தமிழர்களின் உரிமையை சமரசமின்றி வென்றெடுப்போம்,

ஐநா உரை காணொளி: