டெங்கு ஒழிப்பு நடவடிக்கை யாழில் தீவிரம்

233 0
டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ் குடாநாட்டுன் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் 9 பிரிவுகளில் தீவிர பணியை முன்னெடுக்கவுள்ளதாக பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.டெங்கு கட்டுப்பாட்டு வாரத்திற்கான செயல்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
டெங்கு ஒழிப்பு வாரம் எதிர்வரும் 29ம் திகதி முதல் ஏப்பிரல் 4ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இக்காலப்பகுதியில்  யாழ் குடாநாட்டுன் 12 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு உள்ளது இதில் தற்போது டெங்குத் தாக்கம் உள்ள   9 பிரிவுகளில் தீவிர பணியை முன்னெடுக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட சகல ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
இப் பணிகளிற்காக சாவகச்சேரி , யாழ்ப்பாணம் பிரிவுகளிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதமும் வேலணை , காரைநகர் , சங்காணை தவிரந்த ஏனைய ஏழு பிரிவுகளிற்கும் தலா 60 ஆயிரம் ரூபா வீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேநேரம்  வேலணை , காரைநகர் , சங்காணை ஆகிய மூன்று பிரிவுகளிலும் டெங்கு நோய்த் தாக்கம் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளதோடு வடமராட்சிப் பகுதியிலேயே இந்த வாரம் அதிக தாக்கம் கானப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.-