ஜடேஜா, புஜாரா முன்னிலை – அஸ்வின், கோஹ்லி பின்னடைவு

286 0

சர்வதேச கிரிக்கட் பேரவையின் புதிய டெஸ்ட் கிரிக்கட் தரவரிசைப் பட்டியலின் படி, பந்துவீச்சாளர்களில் இந்திய கிரிக்கட் அணியின் ரவீந்திர ஜடேஜா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போர்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் 9 விக்கட்டுகளை வீழ்த்தியதன் ஊடாக அவர் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதலாம் இடத்தில் இருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

மூன்றாம் இடத்தை இலங்கை அணியின் ரங்கன ஹேரத் பெற்றுள்ளார்.

அதேநேரம் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் முதலாம் இடத்தை அவுஸ்திரேலியாவின் ஸ்ரீவன் ஸ்மித் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தில் இந்தியாவின் செட்டிஸ்வர் புஜாரா உள்ளார்.
இதன்படி, இரண்டாம் இடத்தில் இருந்த விராத் கோஹ்லி 4ஆம் இடத்திற்கு பின்சென்றுள்ளார்.
மூன்றாம் இடத்தை இங்கிலாந்தின் ஜோய் ரூட் பிடித்துள்ளார்.