அயோத்தி பிணக்கு – பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

228 0

இந்தியாவின் அயோத்தியை மையப்படுத்தி இடம்பெறும் இந்து – முஸ்லிம் பிணக்கிற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வடஇந்திய நகரான அயோத்தியாவில் அமைக்கப்பட்டிருந்த 16ஆம் நூற்றாண்டுக்குச் சொந்தமான முஸ்லிம் பள்ளி, கடந்த 1992ஆம் ஆண்டு இந்து கிளர்ச்சியாளர்களால் அழிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஏற்பட்ட கலவரங்களால் 2000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

அயோத்திய நகரானது ராமாயனத்தில் வரும் பாத்திரமான ராமரின் நாடாக இந்துக்களால் பார்க்கப்படுகிறது.

எனவே அங்கு ராமர் கோவில் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்று இந்துக்களும், அழிக்கப்பட்ட பள்ளிவாசலை மீண்டும் புதிதாக அமைக்க வேண்டும் என்று முஸ்லிம்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கினை நாளாந்தம் விசாரிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் கோரி மீள்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் போது, இந்த பிரச்சினையை இரண்டு தரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.