முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில்..(காணொளி)

254 0

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு, திடீர் மயக்கம் போன்றவற்றினால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள சிறுவர்கள் ஒரு வகையான காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,  தமது நிலங்கள் விடுவிக்கப்படும்வரை தமது போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாப்பிலவில் 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு, வடக்கில் மட்டுமல்லாமல், தென்னிலங்கையிலும் உள்ள பொது அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.