வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் வாகன விபத்து ஒருவர் பலி(காணொளி)

277 0

 

வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளார்.

ரம்பாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கி அரிசிகளை ஏற்றிச் சென்ற பட்டா ரக வாகனமொன்று  நேற்று மாலை 4.30 மணியளவில் மதவாச்சி பூனாவை பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வாகனத்தின் சாரதியான கல்குனாமடு பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய அபல் தாரக்க சஞ்சீவ விமலசேன என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.