வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள்(காணொளி)

280 0

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள விசேட தேவக்குட்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள் இன்று வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றது.

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு முதற்கட்டமாக சக்கரநாற்காலிகளை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வைகறை பொறுப்பு தாதியர் மற்றும் வைத்தியர்கள் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன்…

எச்1 எம்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையின் தொழிற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அதன் காரணமாக வைகறை மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தை பராமரிப்பது கடினமான பணியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் விசேட தேவைக்குட்பட்டோர் நான்கு பேர் மிகவும் திறமையாக வைத்தியசாலையில் பணியாற்றுவதாகவும் கூறினார்.