இனவழிப்பை மூடிமறைக்க இலங்கை அரசு தீவரமாக முன்னெடுக்கும் சுற்றுலாத்துறைக்கு எதிராக யேர்மன் தலைநகரத்தில் சுவரொட்டிகள்!

402 0

யேர்மனி தலைநகர் பேர்லினில் உலகளாவிய ரீதியில் மாபெரும் சுற்றுலாத்துறை கண்காட்சி கடந்த நாட்களாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் வழமை போல் சிறீலங்காவும் பங்குபற்றி தமிழின அழிப்பை மூடிமறைக்கும் முகமாக சுற்றுலாத்துறை ஊடாக தனது பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டது .சிறீலங்கா அரசின் பொய்முகத்தை அம்பலப்படுத்தும் முகமாக கண்காட்சி நடைபெறும் மண்டபத்துக்கு வெளித்திடலில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரொட்டிகளில் சுற்றுலாத்துறை தமிழ் மக்களின் இன அழிப்புக்கு நிதி வழங்குகின்றது என்பதை வெளிப்படுத்தும் முகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

69 ஆண்டுகள் கடந்தும் தமிழரின் உரிமைக்கான கேள்விக்கு எந்த பதிலும் அல்லாது , சிறீலங்கா இனவெறி அரசு அதிஉச்ச இனவழிப்பாக 2009 ஆண்டு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை சர்வதேச போர் விதிமுறைகளை மீறி நச்சுக்குண்டுகளை வீசி அழித்து வெற்றி கொண்டாடியது .

அதை தொடர்ந்து சர்வதேச நாடுகளில் போரின் விளைவுகளையும் , போர்க்குற்றங்களையும் இனவழிப்பையும் தமிழ் மக்களின் தற்சமய அவல நிலைமையையும் மறைத்து பல்லாயிரக்கணக்கான நிதியை கொட்டி சுற்றுலாத்துறைக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது .அந்தவகையில் சிறீலங்கா தனது சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வெளிநாட்டவர்களின் வருகையை ஆவணப்படுத்தி தனது அரசியல் நோக்கத்துக்கு பயன்படுத்துவது தெளிவாகிறது . இதை முறியடிக்கும் முகமாகவே இந்த சுவரரொட்டிகள் ஒட்டப்பட்டன.