கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில்…(காணொளி)

268 0

 

இதேவேளை காணி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது குடியிருப்பு காணிக்கான நிரந்தர அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறும் நிரந்த வீட்டுத்திட்டத்தை வழங்குமாறும் வலியுறுத்தி, கிளிநொச்சி பன்னங்கண்டி கிராம மக்கள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பசுபதிப்பிள்ளை கிராமத்தின் முன்பாக பன்னங்கண்டி கிராம மக்கள் நேற்றுமுன்தினம் முன்னெடுத்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறினர்.

தங்குவதற்கு காணிகளற்ற நிலையில் காணப்பட்ட குறித்த மக்களுக்கு, புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களது காணிகளில் ஒரு தொகுதி காணி தமிழீழ விடுதலைப் புலிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்தக் காணிகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

குறித்த காணிகளில் வசித்து வந்த மக்கள் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் குடியேறி 7 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாத நிலையில் பல்வேறு இன்னல்களுக்க மத்தியில் வாழ்ந்துவருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் 20 வருடங்களுக்கும் மேலாக பன்னங்கண்டி கிராமத்தில் வசிக்கும் 187 குடும்பங்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தும், தமக்கான வீட்டுத்திட்ட வசதியைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தியும் குறித்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.