இலங்கை வீரருக்கு போட்டித் தடை

259 0

இலங்கை கிரிக்கட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியின்போது, நடுவரின் தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இது சர்வதேச கிரிக்கட் பேரவை விதிமுறைகளுக்கு முரணானதென நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்காக போட்டிப்பணத்தில் முப்பது சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டன.

அதேநேரம், கடந்த பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி தென்னாபிரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின்போது விதிமுறை மீறியமைக்காக போட்டிப் பணத்தில் ஐம்பது சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன் மூன்று தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டன.

இதன்படி 24 மாதங்களுக்குள் நான்கு தகுதியிழப்பு புள்ளிகளுக்கும் அதிகமான புள்ளிகளை பெற்றதனால் அவருக்கு இரண்டு போட்டித் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அவருக்கு நாளை இடம்பெறவுள்ள 20க்கு 20 போட்டியிலும் ஒரு நாள் போட்டியொன்றிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிரோஸன் திக்வெல்லவுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை இடம்பெறவுள்ள மூன்றாவது 20க்கு 20 போட்டியில் பெரும்பாலும் தஸூன் ச்சானக அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

ஒழுக்க விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் நிரோஸன் திக்வெல்லவுக்கு ஒரு, 20க்கு 20 போட்டியிலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டியிலும் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.