அவுஸ்திரேலிய சந்தைத் தொகுதியில் மோதி விமானம் விபத்து, 5 பேர் பலி

243 0

அவுஸ்திரேலிய மெல்பேர்ன் விமான நிலையத்துக்கு அருகில் சந்தைத் தொகுதியொன்றில் மோதி சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் விழுந்தவுடன் வெடித்துச் சிதறிய காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.