கேப்பாபுலவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

284 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையக படுத்தியுள்ள  தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த 20நாட்களாக விமானப்படை முகாமுக்கு முன்பாக வீதியோரத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் 20 நாளான இன்றையதினம்  புதிய ஜனநாயக  மாக்சிச லெனினிச கட்சியினரால் கேப்பாபுலவு மக்களின் போராடடத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக கவனயீர்ப்பு போராடடம் ஒன்று கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
 இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில்  புதிய ஜனநாயக  மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர்
சி .கா செந்தில்வேல் மற்றும் வட பிராந்திய செயலாளர் கதிர்காமநாதன் மலையக செயலாளர் டேவிட் சுரேன் வன்னி மாவடட செயலாளர் என்.பிரதீபன் ஆகியோர் கலந்துகொண்டதோடு இவர்களுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பட்மினி சிதம்பரநாதன் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் யாழ்ப்பாணம் அரங்க செயற்பாட்டு குழுவினரும் இணைத்துக்கொண்டிருந்தனர்.
 இதில் போராட்டக்களத்தில் உள்ள சிறுவர்கள் பெண்கள் முத்தியவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை காணிவிடுவிப்பு தொடர்பிலான உரிமை பாடலினையும் இசைத்தனர்.
 இதில்  கருத்து வெளியிட்ட புதிய ஜனநாயக  மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி .கா செந்தில்வேல் வளமான நிலங்களை கொண்ட கேப்பாபுலவு கிராமம் தமிழர்களின் பாரம்பரிய பூமியாக இருந்துவந்துள்ளது ஆனால் இன்று  இராணுவம் அவர்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு இந்த மக்களை அவல வாழ்க்கைக்குள் தள்ளியுள்ளது.
இந்த கேப்பாபுலவு மக்களின் போராடடம் நியாயமானது அவசியமானது ஏற்றுக்கொள்ளக்கூடியது இவர்களின் காணிகள் விரைவில்  விடுவிக்க பட  வேண்டும் இன்றைக்கு வடக்கு கிழக்கில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்க படவேண்டுமென நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். இந்த மக்களின் போராட்டமானது ஏனைய இடங்களில் நிலமிழந்த மக்களுக்கெல்லாம் முன்னுதாரணமான போராடடமாக இருக்கின்றது.
 எனவே இந்த மக்களின் காணிகள் கையளக்கப்படும் வரை இவர்களின் போராடடத்துக்கு வெளியிலே இருக்கக்கூடிய நாங்கள் அனைவரும் இணைந்து வெவ்வேறு வழியிலே போர்டட்ங்களை முன்னெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.