கச்சதீவு செல்ல 5000 இந்தியர்கள் பதிவு

251 0

அடுத்த மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவில் நடைபெறவுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வதற்காக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்தியாவில் இருந்து ஏராளமான யாத்திரீகர்கள் பதிவு செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் யாத்திரீகர்களுடன் மொத்தமாக 5 ஆயிரத்து 15 பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாக வேர்கொடு பங்குத் தந்தை சங்கராஜ் தெரிவித்துள்ளார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம் கடந்த டிசெம்பர் மாதம் 23ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

அதன் காரணமாகவே அதிக அளவிலான யாத்திரீகர்கள் அங்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியா மற்றும் கச்சதீவுக்கு இடையே யாத்திரீகர்களை ஏற்றி இறக்குவதற்காக இந்த முறை 147 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

இதனிடையே, கடந்த வருடம் 3 ஆயிரத்து 249 யாத்திரீகர்கள் கச்சதீவு உற்சவத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.