யாழில் துவிச்சக்கரவண்டி பொலீஸ் அணி ஆரம்பித்து வைப்பு(காணொளி)

276 0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் சைக்கிள் ரோந்து அணியின் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொலிஸ் சைக்கிள் ரோந்து அணியின் செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வு யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு தலா ஐந்து துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டு ரோந்து நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண பிரதி பொலிஸ மா அதிபர், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சைக்கிள் ரோந்து அணியின் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பித்துவைப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

உருவாக்கப்பட்டுள்ள பொலிஸ் சைக்கிள் ரோந்து அணியின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களுக்கு இடையூறு விளைவிப்போர், சட்டவிரோத நடவடிக்iகையில் ஈடுபடுவோரின் செயற்பாடுகளை குறைக்கவும் முடியும் என்று கூறினார்.

பொலிஸ் திணைக்களத்தால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டமையானது பொலிஸாருக்க கிடைத்த வரப்பிரசாதமாகும் என்று குறிப்பிட்டார்.

துவிச்சக்கரவண்டி மற்றும் அதனுடன் வழங்கப்பட்ட உபகரணங்களை பொலிஸ் அதிகாhரிகள் உரியமுறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாண பிரதி பொலிஸ மா அதிபரிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த யாழ்ப்பாண பிரதி பொலிஸ மா அதிபர், அவ்வாறு கூறமுடியாது எனவும், மோட்டார் சைக்கிள் அணியுடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

அத்துடன், யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குற்ற செயல்கள் தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.