சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக……(காணொளி)

276 0

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக 300 பேருக்கான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் எஸ்.விக்னேஸ் தெரிவித்தார்.

உணவுப் பொருட்களை சர்தேச தரத்தில் கையாள்வது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் எஸ்.விக்னேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் மற்றும் வெளிநாட்டு உணவுப்பொருட்கள் என்பவற்றை சர்வதேச தரத்தில் கையாள்வது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலில் உணவுப்பொருட்களை கையாள்வது தொடர்பான ஜெர்மனியைச் சேர்ந்த விசேட நிபுனர் கொக், யாழ்ப்பாண மாநகர சபை ஆளுநர் பொ.வாகீசன், மற்றும் துறைசார்ந்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.