கிழக்கில் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை – கிழக்கு முதல்வர்

208 0
கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் வீடில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு குறைந்தது 20 ஆயிரம் வீடுகள் தேவை என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இதனை தாம் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் கடந்த 30 வருட கால யுத்தத்தில் அதிக இழப்புக்களை சந்தித்ததோடு தமது வீடுகளையும் இழந்தனர்.
எனவே, அவர்கள் குடியிருக்க வீடுகள் தேவை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவற்றை செய்து கொடுக்க வேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் கடமையாகும்.
இந்தநிலையில், 2017ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் வீடில்லா பிரச்சினைக்கு முடிந்தளவு தீர்வினை பெற்று கொடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.