பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று யாழில்!

229 0

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று முற்பகல் 10.30 மணியளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

5 வருடங்களுக்கு ஒருமுறை ஐநாவின் உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமைகளினது நிலைகள் தொடர்பாக மீளாய்வு செய்து ஐநாவின் மனித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அந்தவகையில் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு முதன் முதலாக 2008ம் ஆண்டும் அதனைத் தொடர்ந்து 2012ம் ஆண்டும் நடைபெற்றது. இதன் பின்னர் தற்போது ஆரம்பிக்கப்படுகிறது.

பூகோள கால மீளாய்வு குழுவின் அமைப்பாளர் யேசுதாசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டு தம்முடைய பிரச்சினைகளை தெரியப்படுத்தினர்.

இவ் பூகோள கால மீளாய்வு குழுவினர் இலங்கையில் 14 மாவட்டங்களுக்கு சென்று மக்களின் கருத்துகளை கேட்டறியவுள்ளனர். அந்தவகையில் கடந்த 3ம் நாள் மட்டக்களப்பிலும், 4ம் நாள் அம்பாறை, மாத்தறை பிரதேசங்களிலும், நேற்றயதினம் மன்னாரிலும், இன்றைய தினம் யாழ், காலி, பதுளை போன்ற பிரதேசங்களிலும் நாளைய தினம் திருகோணமலையிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

image-0-02-06-2be04c6f82c2706cd380146da2932cf3752798f164985e25d6fda704d460b5f9-vimage-0-02-06-2f5e488d1035ebd9bd183a1ed5f0f4cc965854973b9d0cf4ce7692f5cd2723c6-vimage-0-02-06-1ad852685227c01ac3bbc49e1dc7fee9156bdcf9d980017f081dc69d58cf3a04-v