நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

263 0

நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த மீனவர்களின் படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களை யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனையடுத்து நீரியல் வளத் திணைக்களத்தினர், அவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதியும் படகொன்றுடன் ஐந்து தமிழக மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்திருந்தனர்.

இதன்பிரகாரம் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழக மீனவர்களின் 120 க்கும் அதிகமான படகுகளை விடுவிக்குமாறு தமிழக அரசாங்கம் வலியுறுத்திவருகின்றது.

எனினும் குறித்த படகுகள் எந்தகாரணத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர திட்டவட்டமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.