இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்படமாட்டாது – இலங்கை அரசாங்கம்

277 0

சட்டவிரோத மீனபிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது கடற்றொழில் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என இந்தியாவில் நீதிமன்ற உத்தரவொன்று பெறப்பட்டுள்ளது.

அது தமக்கு அவசியமில்லை. தமது நாட்டு சட்டமே தமக்கு அவசியமாகும் என அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைதுகள் மற்றும் படகுகள் கைப்பற்றப்படுவது அதிரிகரிப்பட்டுள்ளது.

சுமார் 120 படகுகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் காரணமாக இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது 50 சதவீதத்தால் குறைவறைவடைந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.