வித்தியாவின் கொலை வழக்கில் நீதவானின் அதிரடி முடிவுகளால் தீடிர் திருப்பங்கள் (முழுமையானவிபரங்கள் வீடியோ பதிவு இணைப்பு)

651 0

வித்தியாவின் வழக்கு விசாரணை வழமைக்கு மாறாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே தற்போது நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக ஆயுதம் தாங்கிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு உள்ளே பாதுகாப்பு வழங்குகின்றார்கள். விசேட அதிரடிப் படையினர் நீதிமன்ற வளாகத்திலும் அதனை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு வழங்குகின்றார்கள்.
விசேட அதிரடிப் படையினர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கம் போது மோட்டார் சைக்கில் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


இவ்வாறு நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது:- 

வித்தியாவின் கொலைக்கு முன்னரும், பின்னரும் புங்குடுதீவு பிரதேசத்தில் நடந்தவை தொடர்பாக அப்பகுதி கிராம சேவையாளரிடம் நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
மாறாக வித்தியாவின் குடும்பம் பதிவு செய்யப்பட்டிருந்த அயல் கிராம சேவையாளர் பிரிவில் நடத்தவை தொடர்பான அறிக்கையே மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கினை விசாரிணை செய்து வரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் கடந்த வழக்குத் தவணையின் போது வித்தியா வசித்து வந்த பிரதேசத்தில் கொலை நடப்பதற்கு முன்னரும், பின்னரும் நடந்த மாற்றங்கள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் வழக்குத் தவணைக்க முன்பாக மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் வித்தியாவின் குடும்பம் வசித்து வந்த துஃ25 கிராம சேவையாளர் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
மாறாக வித்தியாவின் குடும்பம் பதிவு செய்யப்பட்டிருந்த துஃ24 கிராம சேவையாளர் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராகியிருந்தார். மன்றில் ஆஜராகிய குறித்த கிராம சேவையாளர் தனது கிராமத்தில் வித்தியாவின் கொலை சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் சடுதியான மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றிருந்தார்.
குறிப்பாக வித்தியா கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அக்கிராம சேவையாளர் பிரிவில் 30 குடும்பங்கள் இருந்தன. கொலைக்குப் பின்னர் 31 குடும்பங்கள் வசித்து வந்தன.
அப்பிரதேசத்தில் வசித்துவந்த ஒருவர் திருமணம் செய்து புதிய குடும்பப் பதிவினை செய்திருந்தாலேயே ஒரு குடும்பம் அதிகரித்திருந்தது.
மேலும் கொலைக்குப் பின்னர் இரண்டு குடும்பங்கள் அப் பகுதியை விட்டு தற்காலிகமாக வெளியேறியுள்ளனர். குடும்பப் பிணக்கு, மரணச் சடங்கு என்பதற்காகவே அவர்களும் தற்காலிகமாக வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்து குறித்த புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பித்திருந்தார். இறுதிவரைக்கும் நீதிமன்றத்தினால் கோரப்பட்ட அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவே இல்லை.

மரவனுப்பரிசோதணை அறிக்கை சம்மந்தமாக நடைபெற்றவை
வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களின் ஒருவர் மரவணுப்பரிசோதனைக்காக எங்களிடம் இருந்து இரண்டு முறை இரத்த மாதிரிகள் சேகரிக்ககப்பட்டிருந்தன. நீண்ட காலத்தின் பின்னர் அவ்மரவணுப்பிசோதணை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவ்வறிக்கை மன்றிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை தொடர்பாக தெரிவிக்கப்படவில்லை. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதை தெரிவித்தால் யார் குற்றவாளிகள் என்பது தெரிந்துவிடும்.
எனவே மரவணுப்பரிசோதணை அறிக்கையின் முடிவுகளை தெரிவிக்க வேண்டும் என்று நீதவானிடம் கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதவான்:- மரவனுப்பரிசோதணை அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டிய இடத்தில், உரிய சந்தர்ப்பங்களின் போது தெரிவிக்கப்படும், அவ்வறிக்கையின் முடிவுகளை இப்போது பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று கூறி சந்தேக நபர்களினால் மன்றில் கோரப்பட்ட விடயத்தினை நீதவான் நிராகரித்தார்.

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரியின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களால் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலங்களின் பிரதிகளை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்குவற்கு நீதவான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்றில் தோன்றியிருந்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி:- வித்தியாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகன்னற. இவ்விசாரணைகளுக்காக வேறு சில தகவல்கள் தேவைப்படுகின்றது.
இந்நிலையில் சந்தேக நபர்களினால் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் பிரதிகளை தந்துதவுமாறு கோரியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நீதவான்:- சந்தேக நபர்களினால் மன்றில் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் நீதிமன்றத்தினால் இரகசியமான முறையில் சீல் செய்யப்பட்டு பேணப்பட்டு வருகின்றது. அதனை விசாரணைகளுக்காக வழங்க முடியாது.
இங்கு நடைபெறும் விசாரணைகளின் முடிவில் சட்டமா அதிபர் திணைக்களத்திடமே அவ் வாக்குமூலங்கள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரியால் மன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை நீதவான் நிராகரித்திருந்தார்.