மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் (காணொளி)

295 0

மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

மன்னார் மாந்தை மேற்கு வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஏ.தேவதாஸ் தலைமையில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.

வட்டக்கண்டல் கிராமத்தில் 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதுடன், பொதுமக்களும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த படுகொலையை நினைவு கூரும் வகையில நேற்றைய நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.