செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்துவைக்கப்பட்டது(காணொளி)

320 0

வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிறைவுகாண் மருத்தசேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதி நேற்று திறந்துவைக்கப்பட்டது.

நிறைவுகாண் மருத்த சேவை உத்தியோகத்தர்களுக்கான விடுதியை, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நேற்று திறந்து வைத்தார்.

சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு, வட மாகாண சுகாதார அமைச்சரின் மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ், 9 மில்லியன் ரூபாய் செலவில் விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தின்மக்கழிவுகளை சேகரிக்கும் கழிவுத் கட்டிடத்தொகுதியோன்றும் 1.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

திறப்பு விழா நிகழ்வில் சுகாதார அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் ப.சத்தியசீலன், மாவட்ட சுகாதார பணிப்பாளர் பசுபதிப்பிள்ளை பவானி, செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி, செட்டிக்குளம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் யேசுதாஸன், செட்டிக்குளம் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கபிரியல் அந்தோனி, செட்டிக்குளம் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் சந்திரமோகன், செட்டிக்குளம் மகா வித்தியாளய அதிபர் தர்மரட்னம், கிராம அலுவர் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.