ரவிராஜ் வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்ய கோருகிறார் சட்டமா அதிபர்!

246 0

n-ravirajதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து விட்டு, வழக்கு விசாரணைகளை மீண்டும் நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அறங்கூறனர் சபையின் முன் வழக்கை விசாரித்த விசேட மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கு சம்பந்தமான சட்டரீதியான விடயங்களை போதுமான வகையில் தெளிவுப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கூறியுள்ளார்.

அத்துடன் வழக்கு விசாரணைகளை நள்ளிரவு வரை நடத்தியதன் மூலம் முறைப்பாட்டாளர் தரப்பிற்கு அநீதி ஏற்பட்டுள்ளது எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 24ம் திகதி அதிகாலை வழங்கப்பட்டதுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 5 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டனர்.