விமல் வீரவன்சவிற்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு சென்று கொடுக்க அனுமதி

234 0

625-500-560-350-160-300-053-800-900-160-90-1விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு சென்று கொடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோரிக்கைக்கு அமைய வீரவங்சவுக்கு இன்று மதியம் முதல் வீட்டில் இருந்து உணவை எடுத்து வந்து கொடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீரவங்சவின் உடல் நிலை குறித்து பரிசோதனை மேற்கொள்ள சிறைச்சாலை மருத்துவர் ஒருவர் கொழும்பு மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தமது சொந்த தேவைகளுக்காக தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வீரவங்ச எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட 40 வாகனங்களை தனிப்பட்ட மற்றும் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு 91 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக விமல் வீரவங்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.