புளுதியாற்று நீரை திறந்து வட்டக்கச்சி பகுதி விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு புளுதியாறு விவசாயிகள் எதிர்ப்பு(காணொளி)

281 0

puluthiyaruநாட்டில் தற்போது நிலவும் கடுமையான வரட்சியையடுத்து கிளிநொச்சி, புளுதியாற்று நீரை திறந்து வட்டக்கச்சி பகுதி விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு புளுதியாறு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு குளத்தின் கீழான வட்டக்கச்சி விவசாயிகளுக்கு புளுதியாற்று நீரை திறந்து வழங்குவது தொடர்பாக புளுதியாறு விவசாயிகளுடனான கலந்துரையாடலொன்று நேற்று நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் சிஞானம் சிறிதரன் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் நீர்ப்பாசனப்பொறியியலாளர் செந்துரன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே புளுதியாறு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நிலவும் கடுமையான வரட்சியையடுத்து கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துவரும் நிலையில் இரணைமடுக்குளத்தின் கீழுள்ள விவசாயச் செய்கைகளை பாதுகாக்கும் வகையில் புதுமுறிப்புக்குளத்திலிருந்தும், கனகாம்பிகைக்குளத்திலிருந்தும், கல்மடுக்குளத்திலிருந்தும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் நடவடிக்கைகளை நீர்ப்பாசனத்திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.