காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா(காணொளி)

285 0

karainagarயாழ்ப்பாணம் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.

கடந்த 2ஆம் திகதி ஆரம்பமான மார்கழித் திருவாதிரையின் 9ஆம் உற்சவமாகிய தேர் உற்சவத்தில் 5 தேர்கள் வீதி உலா வந்தன.

ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக மூன்றாம் வீதியான பெருவீதியில் தேர் ஊர்வலம் இழுத்துவரப்பட்டது.

ஒன்றன்பின் ஒன்றாக இழுத்துவரப்பட்ட தேரில் முதலாவது தேரில் விநாயகருடன் முருகப்பnருமான் வள்ளி தெய்வானை சமேதராக வீற்றிருக்கும் தேரும், இரண்டாவது தேரில் அரிகர புத்திரனாகிய ஐயனாரும், மூன்றாம் தேரில் ஆடல் புரியும் இம்பலக்கூத்தனாகிய சிவபெருமானும், நான்காம் தேரில் சிவகாமி அம்மையாரும், ஐந்தாம் தேரில் மாணிக்கவாசகர் பெருமானை தாங்கிய தேரும் இழுத்துவரப்பட்டன.

பிரதட்சனை செய்யும் ஆண்கள் உருண்டு வலம்வர, பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் மூலம் அடியெடுத்து வணங்க பஜனைக் கூட்டத்தினரும் இன்னிசை பஜனை பாட தேர் உற்சவம் இடம்பெற்றது.

தேர் உற்சவத்தில் பெரும்பாலான குடாநாட்டின் பக்தர்கள் கலந்துகொண்டனர்.