தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது!

306 0

pp-5-640x381தமிழ் மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல்  வட – கிழக்கில் ஏற்பட்டுள்ளது.  மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வது திட்டமிட்ட சதியே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலய மாணவர்களை பாராட்டும் விழாவும் ஆசிரியர் தின விழாவும் நேற்று(24) அதிபர் க.தவராசா தலைமையில் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பா.அரியநேத்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது திட்டமிட்டு, குறி வைத்து பொலிஸார் வேண்டுமென்றே கொலை செய்துள்ளளனர். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.

மாணவர்கள் பல சிரமத்தின் அடிப்படையில் கல்வி பயில்கின்றனர். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் எல்லோரும் வெட்டுப் புள்ளிகளை தாண்டி சித்தியடைவதில்லை. ஒரு சில மாணவர்களே அவ்வாறு சித்திபெறுகின்றனர்.

ஆனால் பல்கலைகழகத்தில் மருத்துவ பொறியல் பீடத்துக்கு கடந்த காலங்களில் தெரிவான மாணவர்கள் எல்லோரும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை விடவும் சித்தியடையாத மாணவர்களே கூடுதலாக பல்கலைக்கழம் சென்றுள்ளனர்.

அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலயம் கடந்த 2012ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்டது.இப்பாடசாலையில் 82 வீதமான மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதை பார்க்கும் போது இப்பாடசாலை அதிபர், கல்வி கற்பிக்கும் ஒன்பது பெண் ஆசிரியைகளையும் பாராட்ட வேண்டும்.

அம்பிளாந்துறை கலை மகள் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய முன்னாள் அதிபர் ரவிராஜ் அவரின் துணிவான முயற்சிகளுடன் இந்த மகாவித்தியாலயம் 1ஏ தர பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.ஆயுத முனையில் அனைத்து தமிழ் மக்களையும் அடக்கி வைக்க வேண்டும். அதன் ஊடாக தாங்கள் சொல்வதைத் தமிழ் மக்கள் கேட்க வேண்டும் என்பது துரதிஷ்டவசமான விடயம்.

எங்களுடைய அரசியல் வாதிகள் சிலரும் ஒத்துப் போவதுதான். ஆகையினால் இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கில் பல்கலைக்கழக மணாவர்களுக்கு இனி உத்தரவாதம் கிடைக்குமா என்பதும் இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் மும்முரமாக ஈடுபடுமா என்பதும் கேள்விக் குறியாகும்.இவைகளை உதாரணமாக வைத்து எமக்கு சர்வதேச நீதி கிடைக்கும் வரை போராடவேண்டியது எமது கடமை எனத் தெரிவித்தார்.