தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்(காணொளி)

395 0

sports-meet

தேசிய விளையாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
இன்றைய விளையாட்டு நிகழ்வை சபாநாயகர் கருஜயசூர்யா ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் விருந்தினர்கள் வரவேற்பு நடனம், பான்ட் வாத்தியம் மற்றும் அணிவகுப்பு மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

 
நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் கருஜயசூர்யா, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் கூரே, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.