நீர்வேலி இரட்டை கொலை குற்றவாளிக்கு இரண்டை மரணதண்டணை நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

461 0

img_9299-copyநீர்வேலி இரட்டை படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இரண்டை மரணதண்டணை வழங்கி அதிரடித் தீர்ப்பளித்துள்ளார்.
சுவிஸ்லாந்து வாசியான அ.குனேஸ்வரன் என்று ஆழைக்கப்படும் குணா என்பவருக்கே நீதிபதி மரணதண்டனை விதித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 8 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியினைச் சேர்ந்த தம்பதியினரான மார்கண்டு உதயகுமார், உதயகுமார் வசந்தமாலா என்னும் தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்களுடைய மகனான குணதீபன் என்பவரும் அடித்து காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட வசந்தமாலாவின் சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இக் கெலை சம்பவம் தொடர்பான குற்றப் பகிர்வு பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது வழக்கின் எதிரி மன்றில் வழங்கிய சுண்டுசாட்சியத்தினை மன்று முற்றாக நிராகரித்திருந்ததுடன், பெய்யான வாக்குமூலங்களை வழங்கியதால் எதிரி நீதிபதியால் எச்சரிக்கையும் செய்யப்பட்டார்.
மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் மகளான கோபிக என்பவர் கொலையினை நேரில் பார்த்த கண்கண்ட சாட்சியம் மற்றும் பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்திய கலாநிதியின் சாட்சியம், காயப்பட்ட குணதீபனின் சட்சியம், எதிரியை கைது செய்த பொலிஸ் அதிகாரியின் சாட்சியம் என்பவற்றினை நீதிமன்றம் ஆராய்ந்தது.
இதன்படி எதிரியான அ.குனேஸ்வரனை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நீதிமன்றம் குற்றவாளியாக கருதுகின்றது.
இந்நிலையில் இரண்டு கொலைகளை செய்த அவருக்கு இரண்டை மரண தண்டணை விதிக்கப்படுகின்றது.
மேலும் கொலை செய்யப்பட்டவர்களின் மகனை கொலை செய்யும் நோக்கில் தாக்கிய குற்றச்சாட்டிலும் அவரை குற்றவாளியாக கருதி 5 வருட கடுழிய சிறைத்தண்டணையும் வழங்கப்படுகின்றது.
மேலும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். பணம் செலுத்த தவறின் 6 மாதகால கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்படும்.
ஒரு இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் 2 வருட கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்படும்.
இம் மண்றினால் வழங்கப்பட்ட மரணதண்டணையை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்றும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.