காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்

401 0

201609131331348668_vaiko-speech-vellore-jail-perarivalan-will-provide_secvpfகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வைகோ மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டப்படியான கடைமை தான் கர்நாடகத்துக்கு உண்டே தவிர, இனி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.

கர்நாடக மாநிலம் காவிரி பிரச்சினையில் அரசியல் சட்டத்தையோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையோ நடைமுறைப்படுத்தாமல் காலில் போட்டு மிதித்து வருகிறது. இந்தநிலையில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சில குரல்கள் எழுவது தமிழகத்துக்கு பெருங்கேடாகத் தான் முடியும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழு அமைப்பது மட்டும் தான் ஒரே தீர்வு ஆகும். இதைத்தான் உச்சநீதிமன்றமும் தெளிவாக தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக மாநிலம் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.

அதை தவிர கர்நாடக மாநிலத்தின் சட்ட விரோதப் போக்குகளை அனுமதிப்பதோ, மீண்டும் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் விழுவதோ, காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழி இல்லாமல் போகும் ஆபத்து நேரிடும் என எச்சரிக்கை செய்கிறேன்.

மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக்குழுவை உடனே அமைக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.