ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: துருக்கியில் ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர்

356 0

201609282225225794_turkey-arrests-some-32-000-in-coup-plot-investigation-since_secvpfதுருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.துருக்கியில் ராணுவத்தில் ஒரு பிரிவினர் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் நடந்த பயங்கர சண்டையில் 265 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என குற்றம் சாட்டும் துருக்கி, அவரை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரையில் 32 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துருக்கி நீதித் துறை மந்திரி பெகிர் போஸ்டக், இதுவரை 70 ஆயிரம் பேர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, குலன் ஆதரவாளர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக தலைநகர் அங்காராவிற்கு அருகில் சின்கான் நகரில் புதிய நீதிமன்ற வளாகம் ஒன்றினை துருக்கி அரசு கட்டி வருகிறது.