கிளிநொச்சி சந்தையை அங்கஜன் பார்வையிட்டார்(காணொளி)

360 0

angayan

தீயினால் எரிந்த கிளிநொச்சி சந்தைப்பகுதியையும், பதிக்கப்பட்ட வர்த்தகர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
கிளிநொச்சி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீவிபத்தினால் பலகடைகள் எரிந்து நாசமாகின.
இதனால் பல தொழிலாளர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

 
பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று காலை அங்கு விஜயம் செய்த அங்கஜன் இராமநாதன், கரைச்சிப் பிரதேசசபை செயலாளர் மற்றும் பிரதேச செயலக செயலாளர் ஆகியோரையும் அங்கு அழைத்து பாதிப்பின் நிலைமை தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தன்னாலான முழுமையான உதவிகளை உடனடியாக செய்வதாகவும் தெரிவித்தார்.

 
அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு ஏதுவாக தீயணைப்பு பிரிவினை கிளிநொச்சியில் ஆரம்பிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் கலந்துரையாடி உள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 
அத்துடன், தொழிலினை ஆரம்பிப்பதற்கு அரசாங்க வங்கிகள் மூலம் கடன் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 2017ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் சந்தையினை முழுமையாக புனரமைத்து பதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கையினை, ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் படி ஏற்பாடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.