ஈராக்-ஆப்கானிஸ்தான் போர்களில் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்த அமெரிக்க ராணுவம்

345 0

201608301108149569_US-Loses-14-lakhs-of-Guns-in-Iraq-and-Afghanistan-war_SECVPFஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க ராணுவம் 14 லட்சம் துப்பாக்கிகளை இழந்துள்ளது.அமெரிக்காவின் ஆயுத குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை மையம் சமீபத்தில் பென்டகனின் ராணுவ ஆயுத கிடங்கில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் வாகனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி வரை அனுப்பப்பட்ட ஆயுதங்கள் குறித்து சர்வே செய்யப்பட்டது.

அதில், 14 லட்சத்து 52 ஆயிரத்து 910 துப்பாக்கிகள் மாயமானது தெரிய வந்துள்ளது. அவற்றில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 981 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றவை கைத்துப்பாக்கி, எந்திர துப்பாக்கி, ஷாட்சன்ஸ், ஸ்னிப்பர் ரைபிள்ஸ் உள்ளிட்டவை என பட்டியலிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த தலிபான்களுக்கு எதிராக 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியது.

அதே போன்று சதாம் உசேன் கொல்லப்பட்ட பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான போரை ஈராக்கில் அமெரிக்கா நடத்தியது. இந்த இரு நாடுகளிலும் 14 ஆண்டுகள் போரில் அமெரிக்கா ஈடுபட்டது. அப்போது ஈராக்குக்கு 9 லட்சத்து 49 ஆயிரத்து 582 துப்பாக்கிகளும் அனுப்பப்பட்டன.

தற்போது மாயமான 14 லட்சத்து 52 ஆயிரத்து 910 துப்பாக்கிகள் என்ன ஆனது என பென்டகனால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

ஆனால் அவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஈராக்கில் கடந்த ஜுன் 29-ந்தேதி தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் அமெரிக்க ராணுவத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எம்.-16 ரக துப்பாக்கிகள், வெடி குண்டுகள், டொயோட்டா வாகனம் உள்ளிட்டவை இருந்தது வீடியோவில் கண்டறியப்பட்டுள்ளது.