விடுதலைப்புலிகளுக்கு கோத்தா உதவினார்

284 0

728x410_533_kotaமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது மற்றுமொரு குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தா பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் மங்கள குற்றஞ்சுமத்தியுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும் என நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தை அமைத்த பின்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்மைகளை கண்டறியும் நீதிமன்றத்தை ஒத்த நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் தண்டனைகள் பெற்றுக்கொடுப்பதற்காக இது அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள கலப்பின நீதிமன்றம் போன்றதல்லாமல் இது முழுமையாக தேசிய நன்மைக்காக உள்நாட்டவர்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைக்கப்படவுள்ள நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள் கடமையாற்றுவார்கள் என தான் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்த அமைச்சர் மங்கள தேவை ஏற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்