உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு – சட்ட மூலம் ஒக்டோபரில் நாடாளுமன்றத்தில்

373 0

Benard-300x224மறுசீரமைப்பு பொறிமுறைகளில் ஒன்றான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் எதிர்ரும் மூன்று மாதங்களில் உருவாக்கப்படும்.

இந்தநிலையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

அதற்கு தவறும் பட்சத்தில், ஜனவரி மாதம் இந்த சட்ட மூலத்தின் வரைவு சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், காணாமல் போனோர் அலுவலகம், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வதன் நிமித்தமே உருவாக்கப்படுகிறது என்று வெளியான தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார்.