வவுனியா மாவட்ட நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சி!

376 0

sivamohanவவுனியா நகரசபை செயலாளராக தமிழரல்லாத ஒருவரை நியமிக்க திரைமறைவில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது.இதற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் துணைபோவதாக சந்தேசம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வவுனியாவில் தற்போது நகரசபை செயலாளராக தமிழர் ஒருவரே நியமிக்கப்பட்டிருக்கின்றார்.அவரை அப்பதவியிலிருந்து அகற்றி தமிழரல்லாத சிங்கள அல்லது முஸ்லிம் நபர் ஒருவரை நியமிக்க திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் விடுதிகளுடன் கூடிய மூன்று மாடிகளைக் கொண்ட சத்திரசிகிச்சை வைத்தியசாலை ஒன்றை வவுனியா போதனா வைத்தியசாலை அருகில் அமைப்பதற்காக நகரசபையிடம் அனுமதி கோரியிருந்தார்.

எனினும் வைத்தியசாலையின் கழிவகற்றல் முறையில் எழுந்துள்ள சர்ச்சையையடுத்து, அதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை. முறையான கழிவகற்றல் முறையை மேற்கொண்டால் மாத்திரமே அதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் தனக்கான அனுமதி வழங்காததை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் நகரசபை செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருக்கு எதிராக லஞ்சம் பெற முயற்சித்ததாக குற்றம் சாட்டி லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, இவர்கள் இருவரும் பதவி விலகும் இடத்து அவர்கள் இருவருக்கும் பதிலாக சிங்கள அல்லது முஸ்லிம் உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.