Breaking News
Home / ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம்

உயிர் விதைத்த மண்ணில் உதைபந்தாட்டமா?

முள்ளிவாய்கால் தமிழின விடுதலைப்போருக்கான ஒருமுற்றுப்புள்ளியாய் போனதா? முடிவிலியாய் போனதா? என காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

Read More »

எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
 அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
 அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட  தமிழனுக்கு 
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! வரலாற்று ஊடே அறிய வேண்டுமா ? நாம் தமிழர் என்று உணர்வு பெற்று, சற்று நேரம் கொடுத்து நம் வரலாற்றை அறிய வேண்டுகிறேன்….

சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.

அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே …

Read More »

தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டுவந்த நிலையில்தான் இலங்கைத் தீவு அந்நிய படையெடுப்பிற்குள்ளானது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கைத் தீவை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்த பிரித்தானியர்கள் அவர்களின் நிர்வாக வசதிக்காக மொழி, இனம், சமயம், பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டு ரீதியில் முற்றாக வேறு வேறான தனித்துவத்தைக் கொண்டிருந்த இரு தேசிய இனங்களையும் ஒற்றையாட்சி …

Read More »

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைமையானது சலுகைகளுக்காக இன விடுதலையை தாரைவார்த்து அடிபணிவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றமையானது அந்த இலட்சியத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்த பல்லாயிரம் மாவீரர்களுக்கு …

Read More »

தமிழர் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் ஓய்ந்தது!!!

‘ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்…’ என்ற கர்ஜனைக் குரலில் கோடான கோடி தமிழர்களை கட்டிப்போட்டதுடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் இன்று ஓய்ந்தது. ‘உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்..’ என்ற தாரக மந்திரத்தை மெய்யாக்கும் வகையில் மக்கள் பணியாற்றிவந்த மான்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சுகயீனம் காரணமாக இறந்துவிட்டார் என்ற செய்தி உலகத் தமிழர்களை வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது. 2011 இல் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்ற நாள் …

Read More »

மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்! – குறியீடு இணையம்!

‘மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்…’ எனும் தமிழீழ எழுச்சிப் பாடலை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்ளதில் உவகை ஊற்றெடுக்கின்றது. அந்த பாடல் வரிகளுக்குள்ளாகவே விடுதலைப் போராட்டக் களம் விரிவடைந்து செல்கின்றது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வணங்கா மண் வன்னியிலுள்ள கற்சிலைமடு பகுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழர் முடியுரிமை 1980 களில் மீண்டும் தமிழர்களின் கைகளில் கிட்டய போதிலும் எம் இனத்துடனே உடன்பிறந்த …

Read More »

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி!ஆசிரியர்-குறியீடு இணையம்.

தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின் பெயாரால் அதனை நிரந்தரமாகவே கபளீகரம் செய்யும் திட்டத்துடனே தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளை முழு வீச்சில் நிறுவிவருகின்றது. ஆசையே துன்பத்தின் அடிப்படை என்று போதித்த கௌதம சித்தார்தரின் வழி நடக்கும் சிங்கள பௌத்த மடாதிபதிகளின் மண்ணாசையே இலங்கைத் தீவின் இரத்த சரித்திரத்தின் ஊற்றுக்கண்ணாகும். இலங்கைத் தீவு முழுவதுமே சிங்கள …

Read More »

உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு! ஆசிரியர் – குறியீடு இணையம்

யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் சதித்திட்டத்தின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளது. இந்த கொடும்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறித்த மாணவர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி இறந்ததாக சொல்லப்படும் இடத்தில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்த தகவல்களை பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு மாணவனின் உடலில் துப்பாக்கி சன்னம் …

Read More »

மக்கள் விரோத பாதையில் பயணிப்பவர்கள் வரலாற்று குப்பையில் வீசப்படுவது உறுதி!

நீண்ட நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றுவரும் தமிழர் வீர வரலாற்றுடன் சமாந்தரமாக தொடர்ந்தே வருகின்றது துரோக வரலாறும். இன்று நாடற்றவர்களாக நாதியற்று நாம் நிற்பதற்கும் அதுவே அடிப்படைக் காரணமாகும். வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தமிழர்களின் மரபுவழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழ மண்ணின் இறையாண்மையினை நிலைநிறுத்துவதற்கும் பூர்வ குடிகளான தமிழர்களின் இருப்பினை காப்பதற்குமாக காலத்திற்கு காலம் தமிழர் தாயகம் பல போராட்டங்களைச் சந்தித்தே வந்துள்ளது. அந்தவகையில் உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் …

Read More »

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ள ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சியாகும். காந்தி தேசத்திற்கு காந்திய மொழியில் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாட்டினை உணர்த்துவதற்காக தன்னையே உருக்கி பன்னிரு நாட்கள் ஒரு துளி நீரேனும் அருந்தாது உண்ணாநோன்பிருந்து வீரமரணமடைந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவானது பாரத …

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial