Breaking News
Home / காணொளி

காணொளி

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.(காணொளி)

  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 68 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பாக இரவு பகலாக தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். தமது நியாயமான போராட்டத்திற்கு இதுவரையில் உறுதியான பதில்கள் எதுவும் வழங்கப்படாத …

Read More »

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக, டெங்கு பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு பெருக்கம் அதிகமாக உள்ள வெட்டுகாடு பொது சுகாதார பிரிவுகளில் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கும், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் …

Read More »

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில்…..(காணொளி)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். மத்திய குழுவில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read More »

சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்தவர் சிவராம்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

மாமனிதர் தராகி சிவராம் சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தராகி சிவராமின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண …

Read More »

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில்அணையாது எரியும் பெரு நெருப்பு.உடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்தநாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது. தமிழின அழிப்பு நாளில் நீதி கேட்டு ஒன்றுகூடுவோம் வாருங்கள். …

Read More »

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்…..(காணொளி)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலயம் ஏ-9 பிரதான வீதியை மறித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். கிளிநொச்சியில் காணாமல் …

Read More »

அக்கரபத்தனையில் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ (காணொளி)

  அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இன்றைய தினம் நுவரெலியா இரானுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார், இரானுவம், பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தீ காரணமாக இலங்கைக்கே உரித்தான அரிய வகை மூலிகைகள், பெறுமதிமிக்க மரங்கள், உட்பட ஊர்ந்து …

Read More »

யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள்; அறிமுகம்(காணொளி)

முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் அ.யோகராசா தலைமையில் இப்படிக்க தங்கை, இப்படிக்கு அக்கா, போராளியின் காதலி, ஈழப்போரின் இறுதி நாள்கள், வெண்ணிலா குறுநாவல் என்பன அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

Read More »

வெறிச்சோடியது மட்டுமாநகர்(காணொளி)

மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள், மாகாண அரசின்கீழ்வரும் அலுவலகங்கள், வங்கிகள் பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. இதனால் மட்டக்களப்பு நகர் வெறிச்சோடிக்காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read More »

வீதியை மறியல் போராட்டம்; குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நிலமைகளை அவதானித்ததுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக வீதிப்போராட்டம் கைவிடப்பட்டதுடன், சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் சில கேள்விகளை எழுப்பினர். தமிழ் …

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial