Breaking News
Home / உலகம்

உலகம்

பிலிப்பைன்சில் விபத்து – 14 பாடசாலை மாணவர்கள் பலி

பிலிப்பைன்சில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர். குறித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து கொங்கிரீட் தூண் ஒன்றுடன் மோதுண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் மாணவர்களே இவ்வாறு பலியானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More »

20 வருடங்களின் பின்னர் நேபாளத்தில் தேர்தல்

20 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த நேபாளம் தயாராகியுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி குறித்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ளதாக நேபாள அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலே இந்த தேர்தல் இடம்பெறவுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் பொது தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Read More »

இலங்கை வீரருக்கு போட்டித் தடை

இலங்கை கிரிக்கட் அணி வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு இரண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியின்போது, நடுவரின் தீர்ப்பிற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இது சர்வதேச கிரிக்கட் பேரவை விதிமுறைகளுக்கு முரணானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டிப்பணத்தில் முப்பது சதவீத அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டன. அதேநேரம், கடந்த பெப்ரவரி மாதம் எட்டாம் திகதி தென்னாபிரிக்காவின் …

Read More »

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் திட்டம் இல்லை – உசைன் போல்ட்

2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் திட்டம் தம்மிடம் இல்லை என்று குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் மும்மூன்று பதக்கங்களை வென்று போல்ட் சாதனைப் படைத்திருந்தார். எனினும் 2008ம் ஆண்டு அவர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை, சக வீரரின் ஊக்கமருந்து பாவனையால் மீளளிக்க …

Read More »

ட்ரம்ப், தமது புதிய பாதுகாப்பு ஆலோசகரை தெரிவு செய்தார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமது புதிய பாதுகாப்பு ஆலோசகரை தெரிவு செய்துள்ளார். இந்த பதவியில் இருந்து மைக்கல் ஃப்லைன், ரஷ்யாவுடன் கொண்டிருந்த தொடர்பின் காரணமாக பதவி விலகினார். இதனை அடுத்து கடற்படைத் தளபதி ரொபர்ட் ஹவார்ட் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட போதும், அவர் அந்த பதவியை புறக்கணித்தார். இந்த நிலையில் முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரியான எச்.ஆர்.மெக்மாஸ்ட்டர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் ஈராக் மற்றும் …

Read More »

அவுஸ்திரேலிய சந்தைத் தொகுதியில் மோதி விமானம் விபத்து, 5 பேர் பலி

அவுஸ்திரேலிய மெல்பேர்ன் விமான நிலையத்துக்கு அருகில் சந்தைத் தொகுதியொன்றில் மோதி சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். விமானம் விழுந்தவுடன் வெடித்துச் சிதறிய காட்சிகளை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Read More »

வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியது

வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் விமான நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த, வீடியோ பதிவுகள் மலேசியாவின் பல்வேறு இணையதளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வடகொரியா தலைவரின் அண்ணன் படுகொலை தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியது. முகத்தில், பெண் விஷத்தை தேய்த்தது வடகொரியாவில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் ஆட்சி நடந்து வருகிறது. நாட்டின் தலைவராக 33 வயது கிம் ஜாங் அன் பதவி வகித்து …

Read More »

ரஷ்யாவிற்கான ஐ.நா தூதர் விடாலி சர்கின் திடீர் மரணம்

ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா தூதர் விடாலி சர்கின் திடீரென உயிரிழந்தார். தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே அவரது உயிர் பிறிந்தது.

Read More »

தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு

தீவிரவாதி ஹபீஸ் சயீத் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதை இந்தியா வரவேற்று உள்ளது.

Read More »

மொசூலில் இராணுவ படையினர் முன்னேற்றம்

ஈராக்கிய நகரான மொசூலில் இடம்பெற்றுவரும் ஐ எஸ் அமைப்பின் மீதான தாக்குதல்களில் இராணுவ படையினர் முன்னேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய மொசுலில் ஐ எஸ் வசமிருந்த பல கிராமங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய இராணுவ நடவடிக்கையின் போது மொசூலின் முக்கிய பகுதிகளை இராணுவம் அண்மித்துள்ள நிலையில் மனித உரிமை அமைப்புக்கள் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து குரல் எழுப்பி வருகின்றன.

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial