Breaking News
Home / தமிழீழம் (page 20)

தமிழீழம்

கிண்ணியாவில் இன்று அதிகாலை இருவர் உயிரிழப்பு

கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினால் இன்று அதிகாலை இருவர் உயிரிழந்தனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கிண்ணியா மாஞ்சோலைச்சேனை பகுதியைச் 33வயதான ஒருவர் எனவும் மற்றும் கிண்ணியா மக்கள் வங்கி வீதியைச் சேர்ந்த 6வயதான சிறுமி எனவும் தெரிவிக்கப்படுகிறது. கிண்ணியா பிரதேசத்தில் இதுவரையில் ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 பேர் …

Read More »

வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

இலங்கையில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017 ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,229 ரூபாவுக்கு கீழ் தனி நபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியலிடப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய …

Read More »

கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு

முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல் கட்சிக்குரிய தலைமை அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறித்த அலுவலகம் கல்லடியில் இன்று (11) கட்சியின் தலைவரினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அலுவலகம் வடக்கில் மாங்குளத்தில் திறக்கப்படவுள்ளதுடன், கொழும்பிலும் திறக்கப்படவுள்ளதகவும் மேலும்தெரிவித்துள்ளார்.

Read More »

கச்சதீவு திருவிழா – இந்திய பக்தர்கள் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை

கச்சதீவு திருவிழாவில் இந்திய பக்தர்கள் ஒருவரும் கலந்துகொள்ளவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று ஆரம்பமானது. இதில் இந்தியாவில் இருந்து பக்தர்களோ, குருமாரோ வருகை தரவில்லை. ஆண்டுதோறும் இடம்பெறும் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்தும், இலங்கையில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ …

Read More »

கிழக்கு மாகாண சபையை கலைக்க முடியாது-முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

  எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதிக்கு முன்னர் தமது  அனுமதியின்றி  கிழக்கு மாகாண சபையை  கலைக்க முடியாது    என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், இந்த  சூழ்நிலையில்  பலர்  ஜோதிடக்காரர்களாக  மாறி  மாகாண சபை   இன்று கலையும் நாளை கலையும் என ஆரூடம்  கூறிக் கொண்டு திரிவதாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். வாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தில் இடம் பெற்ற இல்ல விளையாட்டுப்  போட்டியின் …

Read More »

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பதினோறாவது நாளாகவும் தொடர்கின்றது.

முல்லைத்தீவு – கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் போராட்டம் இன்று பதினோறாவது நாளாகவும் தொடர்கின்றது. தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியே குறித்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பாடசாலைகள், கோவில்கள், பொதுநோக்குமண்டபம் மற்றும் தமது பொருளாதார வளங்களும் இராணுவத்தால் கையகப்படுத்தபட்டுள்ளதாக குறித்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். போராட்டம் ஆரம்பித்தது முதல் இது வரையில் எந்த விதமான தீர்வும் …

Read More »

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற…..(காணொளி)

  கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் அக்கறையற்ற வகையில் செயற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 19 ஆவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தினை காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வருகின்றனர். வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கு மத்திய, மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வட மாகாண …

Read More »

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 20 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளிப்படுத்து போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இரவு பகலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எவ்வித …

Read More »

கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு – மு.க. ஸ்டாலின்

கச்சதீவை மீட்பதே மீனவர்கள் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டு தமிழக மீனவர்கள் இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தில், இலங்கை அரசை கண்டிக்க இந்திய மத்திய அரசு, வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்டாலின் …

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial