Breaking News
Home / தமிழீழம் (page 10)

தமிழீழம்

நிலமீட்பு தன்னெழுச்சி போராட்டங்களுக்கு FFSHKFDR பங்களிப்பு

சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம மக்களும், புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை காணிக்குரித்துடைய மக்களும் நடத்திவரும் தன்னெழுச்சி நிலமீட்பு போராட்டங்களுக்கு, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) பங்களிப்பை வழங்கியுள்ளது. குறித்த இரு போராட்ட தளங்களுக்கும் இன்று 14.02.2017 …

Read More »

மதுபான சாலைகளால் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது : யோகேஸ்வரன் எம்.பி

வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பெற்றோர்களும் உதவிபுரிய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read More »

கிளிநொச்சியில் வீடுகளுக்கு செல்லாத மின்சார சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடகின்றன

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான  சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல  கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான  மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்  சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்  மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளது. குறித்த மின் கட்டண சிட்டைகள் கடந்த …

Read More »

அதிகாரப் பகிர்வில் ஆகக்கூடிய அதிகாரங்களை பெற முயல வேண்டும் -கிழக்கு முதலமைச்சர்

உருவாக்கப்படவிருக்கின்ற புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  ஏறாவூரில்  நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற செயற்றிட்டங்களின் அமுலாக்கம் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ‘தமிழ், முஸ்லிம் மக்களினதும் சமூகத் தலைமைகளினதும் உறவு, தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட்டு, எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்யப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் …

Read More »

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்ததை கைப்பற்றியது கரைச்சி

கிளிநொச்சிமாவட்டசெயலகநலன்புரிசங்கத்தினால் 2016ம் ஆண்டுக்ககானஅரசஅதிபர் வெற்றிக்கிண்ணப் துடுப்பாட்ட போட்டி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. வருடந்தோறும் நடைபெற்றுவரும் இவ் அரசஅதிபர் வெற்றிக்கிண்ணப்  போட்டியில் இம்முறைமாவட்டத்திலுள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேசசெயலகஅணிகளும் மற்றும் மாவட்டசெயலக அணியும் போட்டியிட்டன இதில்   அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்ததை கரைச்சி பிரதேச செயலக அணிதட்டிக்கொண்டது. பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட அரச அதிபர், கருத்து தொிவித்த போது …

Read More »

புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு

முல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்று  புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். ஒவ்வொரு   எறிகனையும்  16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். குறித்த அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில்தான் 2009 முன் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய  விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது சிறிலங்கா விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளது.

Read More »

சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக……(காணொளி)

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக 300 பேருக்கான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் தலைவர் எஸ்.விக்னேஸ் தெரிவித்தார். உணவுப் பொருட்களை சர்தேச தரத்தில் கையாள்வது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வூட்டும் கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் எஸ்.விக்னேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள …

Read More »

பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் (காணொளி)

கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கான  திட்ட முன்மொழிவுகள் மற்றும் அமைவிடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இன்றைய கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட மாகாண நகர அபிவிருத்திப் பணிப்பாளர், வடமாகான தனியார் போக்குவரத்து சபைத்தலைவர், …

Read More »

மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்……… (காணொளி)

கிளிநொச்சியில், மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின் மின் கட்டண …

Read More »

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி…(காணொளி)

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த மாவீரர் துயிலுமில்லம் காணியின் ஒரு பகுதி தனக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து தனிநபர் ஒருவர், கூலியாட்களை கொண்டு கம்பி கட்டைகள் போட்டப்பட்டு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச்சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் …

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial