Breaking News
Home / அனு

அனு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்.(காணொளி)

  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 68 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் திருகோணமலையில் பட்டதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் சட்டத்துறை சார்ந்தவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி காந்தி பூங்கா முன்பாக இரவு பகலாக தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். தமது நியாயமான போராட்டத்திற்கு இதுவரையில் உறுதியான பதில்கள் எதுவும் வழங்கப்படாத …

Read More »

நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்புரைக்கு அமைவாக, டெங்கு பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு அமைவாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு பெருக்கம் அதிகமாக உள்ள வெட்டுகாடு பொது சுகாதார பிரிவுகளில் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கும், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் …

Read More »

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் மட்டக்களப்பில்…..(காணொளி)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு அமெரிக்க மிசனில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டார். மத்திய குழுவில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read More »

சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்தவர் சிவராம்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

மாமனிதர் தராகி சிவராம் சிங்களப் பேரினவாத அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக, தனது சிந்தனையையும் எழுத்தையும் முன்வைத்து வந்தார் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தராகி சிவராமின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கிளிநொச்சியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாரதி ஸ்ரார் மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வின் பிரதம அதிதியாக வடக்கு மாகாண …

Read More »

12 கோடி ரூபா பெறுமதியான 14 நாடுகளின் பணம் கட்டுநாயக்க சுங்கம் வசம்

வெளிநாட்டு பணத் தொகையுடன் இந்திய நபர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை இவர்களிடமிருந்து சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது. 14 நாடுகளின் நாணயங்கள் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இந்த தொகையை சிங்கப்புருக்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் சுங்கப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Read More »

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு நாளை முதல் மழை

நாடு முழுவதும் பெரும்பாலும் நாளை (30) முதல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை 2.00 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு முதல் காலி வரையான கடல் ஓரப் பகுதிகளில் காலை நேரத்திலும் மழை எதிர்பார்க்கலாம் எனவும் மேலும் திணைக்களம் கூறியுள்ளது.

Read More »

மே தினத்துக்காக 7 ஆயிரம் தனியார் பஸ்கள் தயார்- கெமுனு விஜேரத்ன

மே தின ஊர்வலங்களுக்காக செல்லும் அரசியல் கட்சிகளுக்கு 7 ஆயிரம் தனியார் பஸ்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியே அதிகமான பஸ்களைக் கோரியுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதுதவிர அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களினால் சுமார் 5 ஆயிரம் பஸ்களுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் மே தினத்தில் சுமார் 16 கூட்டங்கள் …

Read More »

நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது- ஜனாதிபதி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின்போது எந்தவொரு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இந்திய பிரதமர் வெசக் தின நிகழ்வைத் தவிர்ந்த எந்தவொரு உத்தியோகபூர்வ நிகழ்விலும் பங்குகொள்ளமாட்டார் என ஜனாதிபதி குறிப்பிட்டார். எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள விசாக பூரணை நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை …

Read More »

12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது

12 கோடி பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் 2 இந்திய நாட்டு பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 14 நாடுகளின் நாணயங்கள் மீட்கப்பட்டதாக சுங்க பிரிவு ஊடக பேச்சாளர் தர்மசேன கஹதவ தெரிவித்துள்ளார். இன்று காலை கைது செய்யப்பட்ட குறித்த 2 பேரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More »

2016 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு

2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கல்வி பொது தராதர உயர்தரப்பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் இன்று இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனை உத்தியோக பூர்வ இணையத்தளமாகிய www.donets.lk இல் பார்வை இடமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஜனவரி மாதம் 07ஆம் திகதி வெளியானது. இதனையடுத்து மீள்திருத்த பரீட்சாத்திகள் ஜனவரி மாதம் 23 திகதி வரையில் விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial